
பாடகி ராஜலட்சுமி / தொகுப்பாளர் பாவனா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா, பாடகி ராஜலட்சுமி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இடத்தை நிரப்பும் வகையில் பிக் பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் விஜய் தொலைக்காட்சி தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
படிக்க | அன்றாட வாழ்க்கைக்கு வெளியே.. ரசிகர்களை வற்புறுத்தும் சின்னத்திரை நடிகை!
ஏற்கெனவே ஒளிபரப்பான அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன்தான்.
தற்போது பிக்பாஸ் -7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இதற்கு முன்பு, நடிகை ரேகா நாயர், பைல்வான் ரங்கநாதன், மாகாபா ஆனந்த், இந்திரஜா ஷங்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா, கிராமிய பாடகி ராஜலட்சுமி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பாவனா தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக ராஜலட்சுமி கலந்துகொண்டிருந்தார். தற்போது சினிமா பாடல்களை ராஜலட்சுமி பாடிவருகிறார். பாவனாவும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். பல்வேறு விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...