
இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதி ராஜா உள்பட பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கட்டிப்போடும் பார்க்கிங்: திரை விமர்சனம்
இதனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதையும் படிக்க: அமீர் அண்ணாவிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்: ஞானவேல் ராஜா!
தொடர்ந்து, இயக்குநர் கரு.பழனியப்பன் அளித்த நேர்காணலில், “எனக்கு பருத்தி வீரன் படத்தில் நடந்த எதுவும் தெரியாது. ஆனால், ஞானவேல் ராஜா தன் பேட்டிகளில் திமிரான உடல்மொழியில் அமீரைத் திருடன் என்கிறார். கார்த்தி ஒவ்வொரு மேடையிலும் ‘என் அண்ணன் அமீர்’ என்கிறார். ஆனால், அண்ணனைத்தான் ஆள்விட்டு திருடன் எனக் கூறுகிறார்கள்.” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி, ஞானவேல் ராஜாவைக் கண்டித்து புதிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிக்க: யார் திருடன்..? ஞானவேல் ராஜாவின் அயோக்கியத்தனம்!: கரு.பழனியப்பன்
இந்நிலையில், இயக்குநர் சேரன், அமீருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில், “அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு.... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்.” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.