நடிகை தர்ஷனா ராஜேந்திரன் படத்துக்கு கதை எழுதும் எழுத்தாளர் பெருமாள் முருகன்! 

‘சேத்துமான்' படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கனா பட தர்ஷன் உடன் மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 
நடிகை தர்ஷனா ராஜேந்திரன் படத்துக்கு கதை எழுதும் எழுத்தாளர் பெருமாள் முருகன்! 
Published on
Updated on
2 min read

எழுத்தாளர் பெருமாள் முருகன், எல்லைகளைக் கடந்து பலரது இதயங்களைத் தொட்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது பெயர் என்றென்றும் பொறிக்கப்படும் அளவிற்கு ஒரு மரபை உருவாக்கியுள்ளார். 

2014ல் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல் வெளியாகி அதன் கதை உலகத்தையே தகிக்க வைத்தது. மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசுப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல் என்ற சாதனையை இந்த நாவல் பெற்றது. இது பெருமாள் முருகனின் கதைசொல்லலுக்கு உலகளாவிய சான்றாகும். 

நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த 'முள்ளும் மலரும்' சமீபத்திய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற சிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். 

கனா படத்தின் மூலம் கவனம் பெற்ற தர்ஷன் உடன் மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்துக்கு பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் கதை, வசனம் எழுதுகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'சேத்துமான்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார். 'ஜெய ஜெய ஜெய ஹே', 'ஹிருதயம்' போன்ற படங்களில் தனது இயல்பான மற்றும் அற்புதமான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களை கவர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாக நடிக்கிறார். 

இயக்குநர் தமிழ் பேசும்போது, "நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களை ஊக்குவிக்கும் எஸ்.வினோத் குமார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்றிருப்பது உண்மையில் பெரிய பாக்கியம். அனைவருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை மீண்டும் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் உருவாக்குவதில் கிடைக்கும் அற்புதமான அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்" என்கிறார். 

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (டிச. 1) காலை பெங்களூரில் தொடங்கியது. படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்கள். 

ஒளிப்பதிவு- தீபக், இசை- பிந்துமாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ், படத்தொகுப்பு: கண்ணன், ஸ்டண்ட்- பில்லா ஜெகன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com