தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழியில் சிரிக்க வைக்கும் இவரது நகைச்சுவைக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
டாக்டர் படப்பிடிப்பில்...
நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமான இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற ஜெயிலர், மார்க் ஆண்டனி படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த அன்னபூரணி, கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படக்கள் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: அழகைவிட கடின உழைப்பு முக்கியம்: நயன்தாரா
46 வயதான ரெடின் கிங்ஸ்லிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. சீரியல் நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அரண்மனை கிளி, திருமகள் உள்ளிட்ட சீரியல்களில் நடிகை சங்கீதா நடித்துள்ளார்.
நடன் இயக்குநர் சதீஷ் தனது எக்ஸ் பதிவில், “இது எந்தப் படத்தின் படப்பிடிப்பும் அல்ல; நிஜமாகவே கல்யாணம் நடந்து விட்டது. வாழ்த்துகள் ரெடின் கிங்ஸ்லி. பிளாக்பஸ்டர் வாழ்க்கை அமைய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Happy married life @kingsely_redin . Wishing blockbuster life ahead . And this is for real not from any film sets . pic.twitter.com/P9dMgU2RSr
â Sathish krishnan (@dancersatz) December 10, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









