முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

உருவ கேலி குறித்த நகைச்சுவைகளை செய்வதில்லை: நடிகர் சதீஷ்

நகைச்சுவை நடிகர் சதீஷ் தான் உருவ கேலி நகைச்சுவைகளை செய்வதில்லை எனக் கூறியுள்ளார். 

News image
Updated On :12 டிசம்பர் 2023, 9:50 pm IST

எதிர் நீச்சல் படத்தில் சதீஷின் நகைச்சுவை மிகவும் கவனம் பெற்றது. பிறகு கத்தி, மான் கராத்தே, ஆம்பள ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை பெரிதும் பாராட்டப்பட்டது. 

நகைச்சுவை நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். பிரவீன் சரவணன் இயக்கும் முஸ்தபா முஸ்தபா படத்திலும் நடிகர் சதிஷ் நடித்து வருகிறார். 

'கான்ஜூரிங் கண்ணப்பன்' படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர். 

Story image

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் சதீஷ், “நகைச்சுவை நடிகன் நல்ல பன்ச் லைன்களை சொல்ல வேண்டும். சொன்னதையே சொல்லாமல் புதியதாக சொல்ல வேண்டும். எங்களது பள்ளியில் சங்கீதாவை 'சங்கூதுற வயசுல சங்கீதா' என கிண்டல் செய்தோம். அப்போது அதன் வீரியம் தெரியவில்லை. அந்த வார்த்தை அவரை எவ்வளவு நோகடித்திருக்குமென புரிகிறது. இபோதெல்லாம் ரசிகர்களும் இதை விரும்புவதில்லை. என்னுடைய படங்களில் உருவ கேலி குறித்த நகைச்சுவைகளை செய்வதில்லை. அதற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.