தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து உள்ளனர்.
2019இல் தும்பா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன் மலையாளத்தில் வரவேற்பு பெற்ற ஹெலன் படத்தினை தமிழில் ‘அன்பிற்கினியாழ்’ என ரீமேக் செய்தார். நாடகத்திலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: பாடல்கள் இசையமைப்பதில் ஆர்வமில்லை: இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா
நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகிய நான்கு நாயகிகளின் கதையை மையமாக வைத்து கண்ணகி படம் உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி பாண்டியனின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின.

நேர்காணலில் நடிகை கீர்த்தி பாண்டியன், “இந்தப் படத்தில் நான் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டது. அதனால் இயக்குநரும் அதைதான் கேட்டார். எனது முகத்தினை மேக்கப் இல்லாமல் அனைத்து வகையான குறைகளுடனும் திரையில் காட்டியிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியே.
இந்தப் படத்தில் எனது கதாபாத்திர பெரிதாக வசனங்கள் பேசாது. மௌனம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள கண்ணகி திரைப்படம் டிச.15ஆம் தேதி வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



