
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1ஆம் நாள் திரையரங்கில் வெளியானது.
கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும் குறிப்பிட்டத்தக்கது.
சலார் புரமோஷன் நேர்காணல் ஒன்றில் பிருத்விராஜ், “கோல்டு படத்தின் தோல்விக்கு காரணம் அது மக்களிடம் கனெக்ட் ஆகாமல் இருந்திருக்கலாம். நன்றாக வசூலித்த படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மக்களை கனெக்ட் செய்திருக்கும். கோல்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நகைச்சுவையான படம்.
இதையும் படிக்க: தள்ளிப்போனது சலார் ரிலீஸ் டிரைலர்!
லிஜோ இயக்கத்தில் நான் நடித்த ‘சிட்டி ஆஃப் காட்’ படம் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல படம். ஆனால் அது மக்களிடம் அந்த நேரத்தில் கனெக்ட் ஆகவில்லை. எல்லா நல்ல படமும் மக்களுக்கு பிடிக்க வேண்டுமென்றில்லை. காலத்துக்கு ஏற்ப மாறலாம்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.