ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்கு தேர்வான விடுதலை!

ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் தேர்வாகியுள்ளது.
ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்கு தேர்வான விடுதலை!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும்  விஜய் சேதுபதி  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

மேலும், இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், 2024-ல் நடைபெற உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் ’லைம்லைட்’ திரையிடலுக்கு விடுதலை - 1, விடுதலை - 2 படங்கள் தேர்வாகியுள்ளன. ரோட்டர்டம்மில் வருகிற ஜன.25 முதல் பிப்.4 ஆம் தேதி வரை திரைப்பட விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com