தென்கொரியப் படமான ‘பாராசைட்’ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வசதியான வீட்டில் ஒருவருக்கு ஒருவர் தெரியாதவர்கள் போல் பணிபுரிகின்றனர். ஏழைகளான அவர்களுக்கும் பணக்காரர்களான வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையேயான பொருளாதாரத்தால் ஏற்பட்ட வாழ்க்கை மீதான பார்வையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது.
இதில், வசதியான வீட்டின் உரிமையாளராக நடித்திருந்தவர் நடிகர் லீ சன் யுன். இவருடைய கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிக்கி விசாரணையில் இருந்த லீ சன் கியூன், நேற்று (டிச.26) தற்கொலை செய்து கொண்டார். லீயின் உடலைப் பூங்கா ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரிலிருந்து மீட்ட காவல்துறையினர், அவருடைய தற்கொலைக் குறிப்பையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தென் கொரிய சினிமாத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

48 வயதான லீ சன், பல்வேறு படங்களிலும் சீரியல்களிலும் நடித்து தென் கொரியாவில் பிரபலமடைந்தவர். ஹெல்ப்லெஸ், ஆல் அபவுச் மை வைஃப் என பல தென் கொரியா வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், 'டாக்டர் பிரைன்' தொடரில் நடித்தவர் கியூன்.

இவரது தற்கொலைக்குக் காரணம், போதைப்பொருள் வழக்குதான் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், தென் கொரியாவில் போதைப்பொருள் சட்டவிரோதமானது. மீறி பயன்படுத்தினால், 6 மாதங்களிலிருந்து 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.
பாராசைட் திரைப்படம் சிறந்த சர்சதேச திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா? ஜோதிமணி கடும் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!

போதைப் பொருள் கடத்தல்! சௌதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் கைது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



