
'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இன்று இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதற்காக நடிகை சம்யுக்தா தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லோரும் தயாரா என ஒரு பதிவும் இன்னொரு பதிவில் விமானப் பயணத்திற்கு நேரமாகிவிட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.
Time to pic.twitter.com/juaTZ0RxuE
— Samyuktha (@iamsamyuktha_) February 4, 2023
இந்தப் பதிவிற்கு கீழ் இசை வெளியீட்டு விழாவில் பாடலை பாடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ‘வாத்தி’ பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.
நடிகை சம்யுக்தாவும் தமிழ் பாடல்களை பல்வேறு நேர்காணல்களில் அருமையாக பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.