மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: காதலர் தினத்தன்று காதலை உறுதிப்படுத்திய ’விக்ரம்’ பட நடிகர்!
படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ வைரலானது.

நடிகை த்ரிஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிப்பதாலும் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியினாலும் ‘லியோ’ படத்தின் மீது எதிர்பார்ப்புள்ளது.
இதையும் படிக்க: காதல் தோல்வியென்றால் இந்தப் பாடலை கேளுங்கள்: நடிகர் நானி
சமீபத்தில் த்ரிஷா காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து 3 நாளில் திரும்பி வந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை பொய்யென நிரூபிக்கும் வகையில் த்ரிஷா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காதலர் தினத்திற்காக இவ்வாறு ஆடை உடுத்தியிருப்பதாக த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 4) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



