பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார்.
மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடலும் நடிகையுமான தாரணி காளிங்கராயருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார்.
முன்னதாக ஓணம் பண்டிகையின்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படத்திலும் தாரணி உடனிருந்தார். அப்போதே காளிதாஸும் தாரணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, “ காதலர் தினத்தன்று இனி நான் தனியாளில்லை” என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



