மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
படக்குழுவினர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விடியோ வைரலானது.
இந்நிலையில் படத்தில் புதியதாக அபிராமி வெங்கடேசன் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதற்கு முன்பு விஜய் டிவி தொடர்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3இல் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
இதையும் படிக்க: திருச்சிற்றம்பலம்’ பட இயக்குநரின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “வருங்காலம் என்பது இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனால் உருவாகுவது. அதை இவர் சரியாக செய்து கொண்டு வருகிறார். வாழ்க்கைக்கு உத்வேகம் அளிப்பவர்.