ரித்திகா
ரித்திகா

தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட 'பாக்கியலட்சுமி' தொடர் ரித்திகா!

'பாக்கியலட்சுமி' தொடரில் திருமணக் காட்சிக்கு தான் தயாராவது எப்படி என்பதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்
Published on


'பாக்கியலட்சுமி' தொடரில் திருமணக் காட்சிக்கு தான் தயாராவது எப்படி என்பதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சின்னத் திரை தொடர்களில், 'பாக்கியலட்சுமி' தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக 'பாக்கியலட்சுமி' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் வரும் அமிர்தா, எழில் பாத்திரங்கள் இளையதலைமுறையினரையும் கவர்ந்துள்ளன. மேலும் அமிர்தா பாத்திரத்தில் நடிக்கும் ரித்திகாவுக்கும் சமுக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

தற்போது 'பாக்கியலட்சுமி' தொடரில் எழிலின் திருமண எபிஸோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், திருமணம் எப்படி நடந்தது என்று குறிப்பிட்டு, தன்க்குத்தானே தாலி கட்டிக்கொள்ளும் விடியோவை ரித்திகா பகிந்துள்ளார். 

இதற்கு பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதுதான் 'செல்ஃப் லவ்' என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 'அப்போ நீங்க இன்னும் சிங்கிள் தானா?' என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com