நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு காந்தாரா படத்தில் இடம்பெற்ற வீட்டில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க- யோகி பாபுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த தோனி..
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், தற்போது மங்களூருவில் ரஜினி - சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படபிடிப்பு காந்தாரா படத்தில் இடம்பெற்ற பண்ணையார் வீட்டில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.