மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன்.
பிரின்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் இதில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகாரத்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சீன்னா...சீன்னா’ பாடல் வெளியானது.
மோகோபாட் காமிரா இதற்குமுன் விஜய்யின் பீஸ்ட், கமல் ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்த்தி நடித்துவரும் ஜப்பான் படத்திலும் இது பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் படத்திலும் இந்த மோகோபாட் காமிரா பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் விடியோ வெளியானது.
இந்தப்படத்தில் ஆர்ஜே ரோஹிணியும் நடித்துள்ளார். இவர் ஏற்கனவெ எல்கேஜி, இப்படை வெல்லும், கந்தசாமி படங்களில் நடித்துள்ளார். இவரது குழந்தையுடன் சிவகார்த்திகேயன் க்யூட்டாக பேசியுள்ளார்.
இதையும் படிக்க: பதான் ரூ.1,000 கோடி வசூல்!
நடிகை ரோஹிணி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “குழந்தைகளின் உரையாடல்களை புரிந்து கொள்வதில் வல்லவர். எனது குழந்தை சிவகார்த்திகேயனிடம் அன்பான நேரத்தை செலவிட்டாள்” என கூறியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


