திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பிப்.17ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் செல்வராகவனின் நடிப்பை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்:
பகாசூரன் படத்திற்கு தென்னிந்தியாவில் நல்ல பெயர் கிடைத்திருப்பதாக தெரிகிறது. எனது நண்பர்களான நட்டி நடராஜன், செல்வராகவனுக்கு வாழ்த்துகள்.
நடிகர் கார்த்தி:
செல்வராகவன் முழுவதுமாக கதாநாயகனாக நடிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு மட்டுமே தெரிந்த சிறந்த நடிகரை இந்த உலகமும் பார்க்கிறது. பகாசூரன் படக்குழுவிற்கு வாழ்த்துகள்.
இதையும் படிக்க: நடிகர் சிம்பு பகிர்ந்த உடற்பயிற்சி ரகசியங்கள்!
எஸ்.ஜே.சூர்யா:
லெஜண்டரி இயக்குநர் செல்வராகவன் சார் பகாசூரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வாழ்ந்துள்ளீர்கள். சிரந்த பாராட்டுகளை பெற்றுவரும் படக்குழுவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் சார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன்:
இதுமாதிரி கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க வேண்டுகிறேன் செல்வராகவன் சார். உங்களது நடிப்பை பற்றி சிறந்த பாராட்டுகளை கேட்கிறேன். பகாசூரன் அணிக்கு வாழ்த்துகள்.
ஜி.வி.பிரகாஷ்:
லெஜண்டரி இயக்குநர் செல்வராகவன்.. சிறந்த நடிப்பை பற்றி கேள்விபட்டேன் சார். பகாசூரன் தியேட்டரில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 12-க்கு மில்க் ரஸ்க்! ஆவின் நிறுவனம் அறிமுகம்!
தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



