நடிகர் சிம்பு பகிர்ந்த உடற்பயிற்சி ரகசியங்கள்! 

நடிகர் சிம்பு பகிர்ந்த உடற்பயிற்சி ரகசியங்கள்! 

சிவராத்திரியை முன்னிட்டு நடிகர் சிம்பு தனது உடற்பயிற்சி ரகசியங்களை பகிர்ந்துள்ளார். 
Published on

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் நடித்துள்ளார்.  கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற திரைப்படத்தின் போது அவரது உடலை பலரும் கேலி செய்தனர். ஈஸ்வரன், மாநாடு படத்தின் போது அதையெல்லாம் உடைத்தெரிந்து கடினமான உடற்பயிற்சி செய்து மீண்டும் உடலை கட்டுக்கோப்பாக கொண்டு வந்தார். 

தற்போது மகாசிவராத்திரியை முன்னிட்டு தனது உடற்பயிற்சி ரகசியங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஜனவரி முதல் பிப்ரவரி வரை தினமும் அவரது உடற்பயிற்சி விவரங்கள் அடங்கியுள்ளது.  

அதில் அமைதியாக உழைத்தால் வெற்றி சபதமிடும் என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் ‘இன்ஸ்பிரேஷன்’, ‘தலைவன் வேற லெவல்’ என கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com