
சன் தொலைக்காட்சியில் அக்கா, தங்கையின் பாசத்தை அடிப்படையாக வைத்து புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
'மலர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 'சித்தி -2' தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்த பிரீத்தி ஷர்மா நடிக்கிறார்.
படிக்க | 'செம்பருத்தி' நாயகியின் புதிய சீரியல் 'மிஸ்டர் மனைவி'
சன் தொலைக்காட்சியில் அதிக எண்ணிக்கையில் சின்னத் திரை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிரைம் டைம் என சொல்லப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். எனினும் நண்பகல் நேரத் தொடர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்தவகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் 'மலர்' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்தத் தொடரில் 'சித்தி -2' தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்த பிரீத்தி ஷர்மா நடிக்கிறார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர், தமிழ் சின்னத் திரை தொடர்களில் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் நடித்து வருகிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் அனிதாவாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் சித்தி–2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அவர் தற்போது மலர் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் நிவிஷா, அக்னி, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தத் தொடரை ஜவஹர் கான் இயக்குகிறார். பிப்ரவரி 27ஆம் தேதி முதல் பிற்பகல் 3 மணிக்கு 'மலர்' தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.