நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எத்தனை தொடர் வந்தாலும்.. 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு குவியும் பாராட்டு!

'மிஸ்டர் மனைவி', 'மலர்' ஆகிய தொடர்களின் முன்னோட்ட விடியோ கமெண்டுகளில் ’எதிர்நீச்சல்’ தொடர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 5:53 pm IST


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ தொடருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ''கண்ணான கண்ணே'' தொடர் முடியவுள்ளது. 'ரோஜா' தொடர் முடிந்துவிட்டது. இதனிடையே முடிவடையவுள்ள புதிய தொடர்களுக்கு மாற்றாக புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

சன் தொலைக்காட்சியில் 'மலர்', 'மிஸ்டர் மனைவி' ஆகிய இரு தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளன. 

Story image

'சித்தி -2' தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்த பிரீத்தி ஷர்மா இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அக்கா - தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. 

இதேபோன்று 'மிஸ்டர் மனைவி' தொடரில், செம்பருத்தி தொடரில் நடித்த ஷபானா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு சின்னத் திரை நடிகர் பவன் ரவீந்திரா நடிக்கிறார்.

Story image

மாறுபட்ட குணம் கொண்ட இரு இதயங்கள் காதலில் இணைந்து அவர்கள் சந்திக்கும் சூழல்களை அடிப்படையாக வைத்து ''மிஸ்டர் மனைவி'' என்ற தொடர் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்த இரண்டு தொடர்களின் முன்னோட்ட விடியோக்களை சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இரண்டு தொடர்களின் முன்னோட்ட விடியோக்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. 

Story image

எனினும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ தொடரின் ஆதரவை அவைப் பெறவில்லை. எத்தனை தொடர் வந்தாலும் ’எதிர்நீச்சல்’ தொடருக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டேதான் செல்லும் என்பதற்கு சான்றாகவுள்ளது ரசிகர்களின் கருத்துகள்.

தேவையானி நடிப்பில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடரில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்த திருச்செல்வம் பல வருடங்களுக்குப் பிறகு 'எதிர்நீச்சல்' தொடரை இயக்குகிறார். கோலங்கள் தொடரில் ஆர்த்தி பாத்திரத்தில் நடித்த ஸ்ரீவித்யா எதிர்நீச்சல் தொடருக்கு வசனம் எழுதுகிறார். இது தற்போதைய சூழ்நிலையில் அதிகமாக பிற்போக்குத்தனங்கள் இல்லாத தொடராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை இந்தத் தொடருக்கு அதிக அளவு ஆதரவு பெருகி வருகிறது.

Story image

'மிஸ்டர் மனைவி', 'மலர்' ஆகிய தொடர்களின் முன்னோட்ட விடியோ கமெண்டுகளில் ’எதிர்நீச்சல்’ தொடர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.