முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

தீபாவளிக்கு அரசன் புரோமோ இல்லையா?

அரசன் திரைப்படத்தின் புதிய புரோமோ குறித்து...

நடிகர் சிலம்பரசன், இயக்குநர் வெற்றி மாறன், சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின்.

Updated On :

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் புதிய புரோமோ வெளியாகாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. கேங்ஸ்டர் கதையான இதில் பலர் நடித்து வருகின்றனர். இதுவரை சென்னை, மதுரையில் இரண்டு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத படப்பிடிப்பே முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது. இதனால், தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாவதாகக் கூறப்பட்டது.

பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்த இந்த புரோமோ 8 நிமிட கால அளவில் இருப்பதாகத் தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில், புரோமோவுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்தாலும் அனிருத்தின் பின்னணி இசை இன்னும் கிடைக்கவில்லையாம். தன் திருமண பரபரப்பில் இருப்பதால் அனிருத்தால் அரசனுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் இதனால் டிசம்பர் முதல் வாரத்தில்தான் அரசன் புரோமோ வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம்தான் விளக்கமளிக்க வேண்டும்!

Reports indicate that no new promo will be released for the film Arasan, starring actor Silambarasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.