உ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்! ரஷியாவில் தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!

அரசன் தாமதத்திற்கு என்ன காரணம்? திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம்!

அரசன் திரைப்பட தாமதம் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார்...

நடிகர் சிலம்பரசன், இயக்குநர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் அனிருத்.

Updated On :

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தின் தாமதம் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது. கேங்ஸ்டர் கதையான இதில் பலர் நடித்து வருகின்றனர். இதுவரை சென்னை, மதுரையில் இரண்டு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத படப்பிடிப்பே முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது. இதனால், தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாகிறது. இதில், பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் தாமதம் குறித்து பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “அரசன் படப்பிடிப்புக்குச் சென்று நடிகர் சிலம்பரசனையும் இயக்குநர் வெற்றி மாறனையும் சந்தித்து பேசினேன். அப்போது, அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக அரசனைக் கொண்டு வாருங்கள் எனச் சொன்னேன். இதைக் கேட்ட வெற்றி மாறன், ‘நாங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், இப்படம் மிகச்சிறப்பாக வர வேண்டும் என நானும் சிலம்பரசனும் அனிருத்தும் நினைக்கிறோம். அதனால், கொஞ்சம் தாமதமாகிறது.’ என்றார். பலரும் சிலம்பரசனால் தாமதம் ஏற்படுவதாக பொய்யாகச் செய்தியைப் பரப்புகின்றனர். அவர் முழு மூச்சாக நடித்துக்கொடுக்க தயாராகத்தான் இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Tirupur Subramaniam has spoken about the delay of the film Arasan starring actor Silambarasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.