அரசன் புதிய புரோமோவில் சந்தீப் ரெட்டி வங்கா!
அரசனில் சந்தீப் ரெட்டி வங்கா....

நடிகர் சிலம்பரசன், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா
நடிகர் சிலம்பரசனின் டெர் டெவில் திரைப்படத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றி மாறன் ஒரே நேரத்தில் அரசன் மற்றும் ராஜன் வகையறா ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இரண்டும் வடசென்னை திரைப்பட உலகுடன் தொடர்புடைய கதை என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இதில், அரசனில் நடிகர் சிலம்பரசனும் ராஜன் வகையறா திரைப்படத்தில் கென் கருணாஸையும் நாயகனாக வைத்து இயக்கி வருகிறார். அரசன் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், பணிகள் முடிவடையாததால் அடுத்தாண்டுக்குச் செல்கிறது.
ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தீபாவளியன்று அரசன் திரைப்படத்தின் சிறப்பு புரோமோவும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், புதிய தகவலாக இந்த புரோமோவில் பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ஷன் கலந்த உணர்வுப்பூர்வமான கதைகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவிற்கு இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது, அவரும் அரசன் புரோமோவில் நடித்துள்ள தகவல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Reports have emerged that director Sandeep Reddy Vanga has acted in actor Silambarasan’s film Daredevil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


