மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இன்ஸ்டாகிராமில் காதலைத் தெரிவித்த ரசிகருக்கு பதிலளித்த ‘சீதா ராமம்’ நாயகி!

சீதா ராமம் படத்தின் கதாநாயகி மிருணாள் தாக்கூர் ரசிகரின் கமெண்ட்டுக்கு பதிலளித்துள்ளார். 

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 11:17 am

DIN

தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள நடிகர் துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. 

Story image

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றி பெற்றது. 

மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தில் இந்திய அளவில் ரசிகர்கள் கிடைத்தனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என வெளியான அனைத்து இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அடுத்து நானியுடன் சேர்ந்து தெலுங்கு படமொன்றில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வெளியான அக்‌ஷய்குமார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வரும் ‘உனக்குள் நானே’ பாடல் ஒளித்துக்கொண்டிருக்க மிருணாள் தாக்கூர் ரீல்ஸ் செய்திருந்தார். 

இந்த விடியோவிற்கு ரசிகர் ஒருவர், “என்னுடைய பக்கத்தில் இருந்து காதல் உறுதி” என கமெண்ட் செய்திருந்தார். இதற்கு மிருணாள், “என்னுடைய  பக்கத்தில் இருந்து கிடையாது” என கிண்டலாக எமோஜியுடன் பதிலளித்திருந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.