மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

'ஒரு பாடலுக்காக...' கயல் தொடரின் நாயகி வெளியிட்ட விடியோ!

'கயல்’ தொடரில் நாயகியாக நடித்துவரும் சைத்ரா ரெட்டி, தனக்குப் பிடித்த பாடல் என்று குறிப்பிட்டு விடியோ பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 4:12 pm IST


'கயல்’ தொடரில் நாயகியாக நடித்துவரும் சைத்ரா ரெட்டி, தனக்குப் பிடித்த பாடல் என்று குறிப்பிட்டு விடியோ பதிவிட்டுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அதிக அளவிலான ரசிகளைக் கொண்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரையிலும் டிஆர்பி பட்டியலில் இந்தவாரம் முதலிலுள்ள தொடர் 'கயல்’. 

இந்தத் தொடர் கடந்த கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தந்தையை இழந்த குடும்பத்தைத் தாங்கும் இளம்பெண்ணாக சமூகத்துடன் போராடிவரும் கதாபாத்திரம் 'கயல்’ தொடரில் காட்டப்படுகிறது. இதனால், பல இளம்பெண்களையும் இந்தத் தொடர் கவர்ந்துள்ளது. 

இந்தத் தொடரில் 'கயல்’ பாத்திரத்தில் நடித்துவரும் சைத்ரா ரெட்டி, அவ்வபோது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வலிமை’ படத்தில் சைத்ரா நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது மாய தோட்டா எனும் ஒடிடி தொடரிலும் நடித்து வருகிறார். ஹங்கமா ஓடிடி தளத்தில் மாய தோட்டா ஒளிபரப்பாகிறது. 

அவ்வபோது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடும் அவர் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களையும் பதிவிடுவார். அந்தவகையில் தற்போது ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். 

அந்த விடியோ எடுத்ததற்கான முக்கிய நோக்கமே ஆயுத எழுத்து திரைப்படத்தில் வரும் உண்மை சொன்னால் நேசிப்பாயா எனும் பாடலுக்காகத்தான் என சைத்ரா குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் விருப்பம் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.