
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படம் 90 கோடி வசூலானதாகவும் தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: கமல்ஹாசனின் 234வது படத்தில் த்ரிஷா?
இப்படத்துக்கு தெலுங்கிலும் ரசிகர்ள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லவ் டுடே திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் போனி கபூர் இந்தப் படத்தினை தயாரிப்பதாகவும், வருண் தவான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது:
லவ் டுடே படத்தின் ரீமெக் உரிமத்தை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் இது குறித்து அனைத்து தகவலும் அடிப்படை ஆதாரமற்றது, போலியானது.
Please note that I have NOT acquired the remake rights of Love Today. All such reports on social media are baseless and fake.
— Boney Kapoor (@BoneyKapoor) January 2, 2023