
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படம் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படத்துடன் பொங்கலுக்கு மோதுகிறது.
இதையும் படிக்க: அமேசானில் ஷூ வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஏற்கெனவே இந்தப் படத்தின் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு புதன்கிழமை அறிவித்தது.
அதன்படி ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துணிவு திரைப்படம் பொங்கல் பந்தயத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது.
தற்போது, வாரிசு திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதி என்கிற நிலையில் துணிவு படத்தை ஒருநாள் முன்பாக துணிவு திரைப்படம் வெளியாகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...