அமேசான் தளத்தில் ஷூ ஆர்டர் செய்த பயனர் தனக்கு வந்த பார்சலை கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமேசான் விற்பனை தளத்தில் பேட்மிண்டன் விளையாட்டிற்கான ஷூவை தள்ளுபடி விலையில் ஆர்டர் செய்திருந்தார். ஜிஎஸ்டி வரியுடன் ரூ.1488 மதிப்பிலான அந்த ஷீ புதன்கிழமை அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது.
இதையும் படிக்க | வெளியானது வாரிசு டிரைலர்!
இந்நிலையில் அந்த பார்சலை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக ஷூ ஆர்டர் செய்தால் ஒரு ஜோடி வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ராமுக்கோ வலதுபக்க ஷூ மட்டும் பார்சலில் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தனக்கு வந்த பார்சல் விவரத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமேசான் நிறுவனம் இதற்கான மாற்று ஷூவை வழங்க முடியாது எனவும், பணத்தை மட்டும் திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கிறோம் எனவும் பதிலளித்துள்ளனர்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
அமேசானில் ஆர்டர் செய்த ஒரு ஜோடி ஷூவில் ஒரு ஷூவை மட்டுமே பெற்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


