
புத்தகமாக வெளிவரும் ஜெய்பீம் திரைக்கதை
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருளர் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகார வர்க்கத்தின் கொடுமைகளை விவரித்தஜெய்பீம் திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது.
இதையும் படிக்க | ’கைதி' ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு
நடிகர்கள் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், குருசோமசுந்தரம் என பலர் நடித்த இந்தத் திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் உலக அளவில் முக்கிய கவனத்தைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தையொட்டி பல்வேறு கருத்தரங்குகளும், விவாதங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் உரையாடலுடன் கூடிய படத்தின் திரைக்கதை நூலாக வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அரைகுறை அரசியலும், தடுமாற்றமான திரைக்கதையும்: வி3 திரைவிமர்சனம்
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை புத்தகக் காட்சி தொடங்க உள்ள நிலையில் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.