
நடிகர் அஜித் குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. இப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க | கல்வி உரிமையை பேசும் காலேஜ் ரோடு: திரைவிமர்சனம்
அதனைத் தொடர்ந்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு நடிகர் சந்தானத்தை நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அரவிந்த்சாமி தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.