
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகிவரும் பொம்மை நாயகி திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு நடித்துள்ளார். இப்படத்தை ஷான் இயக்குகிறார்.
பரியேறும் பெருமாள், கபாலி, ஜெய் பீம் படங்களில் நடித்து கவனம்பெற்ற நடிகை சுபத்ரா, யோகி பாபுவின் மனைவியாக நடித்துள்ளார். அறிவு, கபிலன், இளைய கம்பன் மற்றும் சிலர் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள். சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: வாரிசு, துணிவு: முதல் நாள் முதல் காட்சி பற்றிய அப்டேட்!
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இந்தப் படத்தின் முதல்பாடலான ‘அடியே ராசாத்தி’ பாடல் வெளியாகியுள்ளது. கபிலன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதில் யோகிபாபு பாசமான தந்தையாக, அன்பான கணவனாக இருப்பதை பாரத்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...