
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் நாள் ஒரே நாளில் வெளியாகுமென அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஜனவரி 11ஆம் தேதி துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...