
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளி நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில் ‘கோல்டன் விசா’ என்ற சிறப்பு விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.
அபுதாபியில் உள்ள கார்கள் வாங்குவதற்கு முன்னிரிமை அளிப்பதுடன் சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஸ்பா சேவைகள், உணவகங்கள், மருத்துவ காப்பீட்டிற்கான ஆண்டு சந்தாக்கான தொகைகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
இந்த சலுகைகளுக்கும், சேமிப்பிற்கும் மத்தியில் அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதை பலர் பெருமையாக கருதுவதால் வரும் ஆண்டுகளில் கோல்டன் விசா பெறுபவர்களின் எண்ணிக்கையும், ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடுகளும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க: வாரிசு டிரைலர்: மீம்ஸ், கிண்டல்களுக்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பதில்!
பிற நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கெளரவப்படுத்தி வருகின்றது. தமிழ் திரையுலக பிரபலங்களான பார்த்திபன், திரிஷா, விஜய் சேதுபதி, அமலாபால், மீனா, சிம்பு உள்ளிட்டோர்களுக்கும் கோல்டான் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இயக்குநர் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. தற்போது பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினிக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதை வழங்கியதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுக்கு மிக்க நன்றியென தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.