
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.
இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: தெலுங்கில் மாபெரும் வரவேற்பு: ‘வாரிசு’ திரைப்படம் 3 நாளில் ரூ.100 கோடி வசூலா?
சமீபத்தில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், நேற்றிரவு (ஜன.14) புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ’ரீவால்வர் ரீட்டா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது. கே. சந்துரு எழுத் இயக்குகிறார். பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்ய தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க: ‘ரஞ்சிதமே பாடலுக்கு கருவிலுள்ள குழந்தையும் அசைகிறது’- விடியோ பகிர்ந்து தமன் நெகிழ்ச்சி!
திரையில் வெளியாகும் முன்பே இதன் டிஜிட்டல் ஓடிடி முடிவு செய்யப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...