நிறமிழக்கும் அரிய வகை நோயினால் பாதித்த நடிகை!

பாடகியும் நடிகையுமான மம்தா மோகன்தாஸ் அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நிறமிழக்கும் அரிய வகை நோயினால் பாதித்த நடிகை!

நடிகை சமந்தாவை தொடர்ந்து நடிகையும் பாடகியுமான மம்தா மோகன்தாஸ்க்கும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழில் 2016இல் சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ். குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

38 வயதான இவருக்கு தற்போது தோல் நிறமி இழத்தல் (vitiligo) எனும்  இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, அல்லது சில வைரஸ் தொற்றுகளால் ஏற்படலாம் என அறியப்படுகிறது.

மம்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தினைப் பகிர்ந்து, “நான் நிறமிழந்து வருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் ஆறுதலும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் கூறிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com