‘துணிவு பொங்கலா? வாரிசு பொங்கலா?’ - ரெட் ஜெயண்ட் அதிரடி ட்வீட்! 

பொங்கலுக்கு வெளியான துணிவு, வாரிசு திரைப்படத்தில் எது வெற்றியென ரெட் ஜெயண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
‘துணிவு பொங்கலா? வாரிசு பொங்கலா?’ - ரெட் ஜெயண்ட் அதிரடி ட்வீட்! 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியும் இணைந்து தில் ராஜூ தயாரிப்பில் உருவான திரைப்படம் வாரிசு.

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஜன.11இல் திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால்  இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

குறிப்பாக, துணிவு நள்ளிரவு 1மணிக்கு வெளியானதால் தமிழகம் முழுவதும்  ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன. மேலும், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இரு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் யார் நம்பர்.1 என்ற சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் உருவாகிறது. ட்விட்டரில் வாரிசு முந்தியது, துணிவு முந்தியது என ஏகப்பட்ட வசூல் விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

வாரிசு தயாரிப்பு தரப்பில் ‘பொங்கல் வின்னர்’ என போஸ்டர் வெளியானதும், துணிவு தயாரிப்பு தரப்பில் ‘ரியல் வின்னர்’ என்ற போஸ்டர் வெளியாகியது. 

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டாளர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரண்டு படங்களுமே வெற்றிதான். உங்களுக்கு அருகாமையில் இருக்கும் தியேட்டரில்  துணிவு ப்ளாக்பஸ்டர், வாரிசு ப்ளாக்பஸ்டர் படத்தை பாருங்கள்” என நடுநிலையாக பதிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com