
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது.
இதையும் படிக்க: தெலுங்கில் மாபெரும் வரவேற்பு: ‘வாரிசு’ திரைப்படம் 3 நாளில் ரூ.100 கோடி வசூலா?
தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் வாரசுடு வெளியாகியுள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று (ஜன.14) வெளியாகியுள்ளது.
தமிழை விடவும் தெலுங்கில் வாரசுடு திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் அதன் கொண்டாட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ‘ரஞ்சிதமே பாடலுக்கு கருவிலுள்ள குழந்தையும் அசைகிறது’- விடியோ பகிர்ந்து தமன் நெகிழ்ச்சி!
இந்நிலையில் நேற்று இயக்குநர் வம்சி மற்றும் அவரது தந்தையும் படம் பார்த்துவிட்டு கட்டியணைத்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் வம்சி அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “வாரிசு வாரசுடு பார்த்து எனது தந்தை நெகிழ்ச்சியடைந்த இந்நாள்தான் என்னுடைய மிகப்பெரிய சாதனை. இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நீங்கள் எனது கதாநாயகன் அப்பா... முடிவில்லாத காலம் வரை லவ் யூ... ”
My Biggest achievement was today when My " Naanna / Appaa " was overwhelmed watching #Vaarasudu ( #Varisu )... This is the moment I will cherish for lifetime.. " You are my HERO Naannaa ".....Love You to Eternity... pic.twitter.com/E5SokU8x8g
— Vamshi Paidipally (@directorvamshi) January 14, 2023