‘8 வருஷமாக அஜித்தை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன்’- இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேதனை!

நடிகர் அஜித் குமாரை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன் என பிரபல இயக்குநர் அல்போன்ஸ் வேதனையாக பதிவிட்டுள்ளார். 
‘8 வருஷமாக அஜித்தை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன்’- இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேதனை!

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர்.  

கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும் குறிப்பிட்டத்தக்கது. கோல்டு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் டிசம்பர் 29ஆம் நாள் வெளியானது. 

சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்தார் அல்போன்ஸ். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரனிடம் கமெண்டில் “அஜித்துடன் ஒருப்படம் பண்ணுங்க தலைவா” என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் அல்போன்ஸ். இது குறித்து அவர் கூறியதாவது: 

அஜித் ஸாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் ஸாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலதுக்கை மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் ஸாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 வருஷம் ஆகிறது. எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் ஸாரை பார்த்தால் படம் பண்னுவேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி?  முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே ஸாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com