இயக்குநர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை இயக்கி ராட்சசன் திரைப்படத்தின் மூலம் வெற்றியைக் கொடுத்தார்.
இதையும் படிக்க | ’பொன்னியின் செல்வன் - 2’ டீசர் எப்போது?
இந்நிலையில் ராம்குமார்-விஷ்ணுவிஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது சினிமா ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் இயக்கும் இந்தப் படம் குறித்து இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராம்குமாருடன் மீண்டும் இணைவது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு

அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டுப் பணி: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்!

பிரதமா் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்தாா் மோடி- பாஜக, கூட்டணித் தலைவா்கள் வாழ்த்து
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



