‘அரண்மனை 4’: விஜய் சேதுபதி கதாநாயகனா?

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 
‘அரண்மனை 4’: விஜய் சேதுபதி கதாநாயகனா?

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதில்  ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பேய்ப் படங்களுக்கென்று தனியான ரசிகர்கர்கள் இருக்கிறார்கள்.  இதனால் அரண்மனை 2 திரைப்படம் 2016இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.

பின்னர் இந்தப்படமும் வெற்றியை தொடர்ந்து 2021இல் அரண்மனை 3 எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில், அரண்மனை 4 குறித்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் சுந்தர் சி தற்போது தலைநகரம் 2 படத்தினை இயக்கி வருவது குறிப்பிட்டத்தக்கது. 

சமூக வலைதளங்களில் அரண்மனை 4 படம் குறித்து பாராட்டுப் பதிவுகளாகவும், இதுக்கு இல்லையா ஸார் எண்டு என கிண்டல்களாகவும் மீம்ஸ்கள் அதிகரித்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com