தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மோகன்லால் படத்தில் கமலுடன் மற்றுமொரு தமிழ் நடிகர்! 

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் படத்தில் மோகன்லாலுடன் கமலுக்குப் பிறகு மற்றொருமொரு தமிழ் நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டையரிஸ் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.  தீபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன் இந்தப் படத்துக்கு காஷ்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார்.

ஏற்கனவே இந்தப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக இருக்கும் நிலையில் நடிகர் ஜீவாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

பிப்ரவரியில் மோகன்லாலுடன் நடிகர் கமல், ஜீவாவும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லாலுடன் ஏற்கனவே கீர்த்தி சக்கரா (தமிழில் அரண்) படத்திலும், ஜில்லா படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்தும் நடனமாடியிருப்பார். ஆர்பி சவுத்ரி தயாரிப்பு என்பதால் அவர்ருக்கும் மோகன்லாலுக்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பதால் இந்த சந்திப்பு எளிதானதாக தெரிகிறது. 

விரைவில் படத்தில் நடிப்பவர்கள் பற்றி படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Article

‘தளபதி 67’ எல்சியூ உறுதி: விக்ரம் பட நடிகர் சுவாரசிய தகவல்!

கவுண்டமணியின் நகைச்சுவை பாணியில் சந்தானத்தின் அடுத்த படத்தலைப்பு!

‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர் இணையும் திரைப்படம் பற்றி அறிவிப்பு!

11 நாளில் ரூ.250 கோடி வசூலான ‘வாரிசு’ திரைப்படம்!

‘ஒரு பொண்ணுக்காக இல்லைனா எதுக்காக உயிர் வாழனும்?’ - வெளியானது மைக்கேல் டிரைலர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.