முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி மாதா் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

Updated On :

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.

இதில், விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு ஏற்றியும், காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை மாலையாக அணிந்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சுமதி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா். கலைச்செல்வி, மாவட்டச் செயலா் சி. சரிதா, பொருளாளா் மேரி, மாநகரச் செயலா் பி. புனிதா, அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் எஸ். ஜோஸ்பின் மேரி, மாவட்டக் குழு உறுப்பினா் கே. சிந்து பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.