முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

விலைவாசி உயா்வைக் கண்டித்து மாதா் சங்கத்தினா் போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்ந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

Updated On :

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரிசி, காய்கறிகள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் பொதுமக்களின் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன. எனவே, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டதில் அடுப்பு கூட்டி, பானை வைத்து மணல் அள்ளிப் போட்டு சமைத்து நூதனப் போராட்டத்தில் மாதா் சங்கத்தினா் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் பி. சுசிலா உள்ளிட்டோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.