ஹாலிவுட் திரைப்படம் மிஷன் இம்பாசிபிளுடன் ஜவான் டிரைலர்?

இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
ஹாலிவுட் திரைப்படம் மிஷன் இம்பாசிபிளுடன் ஜவான் டிரைலர்?

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.

சமீபத்தில்  இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் திரைப்படமான டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் திரைப்படத்துடன் ஜவான் டிரைலர் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. 

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே டிரைலர் யூடியூபில் வெளியாகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com