
2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழில் துருவ் விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அல்லு அர்ஜுன்-த்ரிவிக்ரம் கூட்டணியில் 4வது படம்!
இந்த இயக்குநரின் புதிய படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியாகியது.
இதையும் படிக்க: பெயர்ஸ்டோ விக்கெட்டுக்கு அஸ்வின் கூறியது என்ன?
இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநரின் சொந்த தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் தற்போது டிச.1ஆம் தேதி வெளியாகுமென இயக்குநர் தெரிவித்துள்ளார்.
#Animal Postponed to 1st December!
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) July 3, 2023
pic.twitter.com/Dn7jNAwNzR
பாடல்கள் அந்தந்த மொழிகளில் மாற்றப்பட்டு அதற்கேற்ப அதிக நேரமெடுப்பதால் இந்த தாமதமென இயக்குநர் விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...