சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்! 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்! 

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

படங்கள் தோல்வியடைந்தால் நடிகர் சிவகார்த்திகேயன் நஷ்ட ஈடு தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாவீரன் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்.ராமசாமி (எ) முரளி ராமநாராயணன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைப்படம் தயாரிக்கும் பொழுது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படம் தயாரிப்பது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் தலையிட்டு, தீர்க்க நடிப்பில் முயற்ச்சிப்பது மட்டும் போன்ற விஷயங்களை தவிர்த்து கவனம் செலுத்தலாமே என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்துதான் ஆக வேண்டும். "நமக்கு சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்கு பிரச்சனை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. அது நான் நடித்த படம் அதன் லாப நஷ்டங்களில் எனக்கு பங்கு இருக்கிறது. அந்த படத்திற்கு வரும் பிரச்சனைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்" என்று தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்து பேசியுள்ளதற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com