விஜய் சேதுபதி குரலில் மாவீரன்!
நடிகர் விஜய் சேதுபதி குரலில் மாவீரன் படத்தின் விடியோ வெளியாகியுள்ளது.


மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதியின் 50வது பட அப்டேட்!
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இதையும் படிக்க: விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது?
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் குரலாக விஜய் சேதுபதியின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. படக்குழு விடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...