
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியல் விரைவில் விரைவில் நிறைவடையவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் முதல் சீசன் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாம் சீசன்(பாரதி கண்ணம்மா 2) பிப்ரவரி மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
முந்தைய சீசனை போல இல்லாமல், சற்று மாறுப்பட்ட கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிபு சூர்யன், வினுஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்காததால், பாரதி கண்ணம்மா 2 சீரியலை விரைவில் முடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா 2 பாகம் ஒளிப்பரப்பாகும் நேரத்தில், கிழக்கு வாசல் என்ற புதிய தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி வானதி சீனிவாசன் பயணம்!
கிழக்கு வாசல் தொடரில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் ஆனந்த் பாபு நடிக்கின்றனர். மேலும், இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...