நடிகை த்ரிஷா, விஜய் சேதுபதி நடித்து மாபெரும் வரவேற்பினை பெற்ற ‘96’ படத்தில் நடித்தவர் நடிகை கௌரி கிஷன். த்ரிஷாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனுஷின் கர்ணன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் ‘அடியே’, மலையாளத்தில் ‘லிட்டில் மிஸ் ரௌத்தர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.
இதையும் படிக்க: கங்குவா க்ளிம்ஸ் விடியோ: எத்தனை மணிக்கு வெளியாகும் தெரியுமா?
மாலத் தீவு சுற்றுலா சென்றுள்ள கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பதிவிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரசிகர்கள் தீயாக இருக்கிறதெனவும் ஹார்டின்களை கமெண்ட்டுகளில் பறக்கவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதில் ஒரு ரசிகர், “கௌரி பாப்பாவின் வார இறுதி சம்பவம்” என கமெண்ட் செய்துள்ளார்.