மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் விஜய்: சண்டைப் பயிற்சியாளர் கூறியது என்ன? 

ஜவான் படத்தின் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் கூறிய தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

News image
Updated On :25 ஜூலை 2023, 2:58 pm

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில்  இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. தமிழின் நட்சத்திர நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  

Story image

அட்லியும் நடிகர் விஜய்யும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருப்பதால் ஜவான் படத்தில் விஜய் நடித்திருக்ககூடுமென ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் பிரபல ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் நேர்காணல் ஒன்றில், “ஜவான் படத்தில் ஒரே பிரேமில் ஷாருக்கானும் நடிகர் விஜய்யும் இருப்பார்கள். ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார். பின்னர் அவர், “நான் நடிகர் விஜய் சேதுபதியை கூறினேன்” என மழுப்பலாக பேசினார். 

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் நடிகர் விஜய் ஜவான் படத்தில் இருப்பாரென ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் படம் வெளியானால்தான் உண்மை தெரியவரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.